இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பிடியாணை: ஆதாரங்களை திரட்டி வந்த வழக்கறிஞர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Galant) ஆகியோரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான் ( Karim Khan) வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, காசா மீது இஸ்ரேல் இராணும் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுகள் வீசி போர்க்குற்றம் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா (South Africa) வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா முன்வைத்து வரும் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
பிடியாணை
இதன்படி, இஸ்ரேல் - ஹமாஸ் போர் விவகாரம் குறித்து கருத்த தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் கரிம் கான், ஹமாஸ் அமைப்பு மனிதகுலத்திற்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திய போது மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் செய்தமையால் இஸ்ரேல் இராணுவமும் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோரை கைது செய்யவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோரை கைது செய்யவும் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞரான கரிம் கான் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |