ஈரான் அதிபரின் உலங்கு வானூர்தி விபத்து: இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தமைக்கும் தங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல் (Israel) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் (Iran) அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்ககு வானூர்தி கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.
அதன்போது, அதிபர் ரைசி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகம் உறுதிபடுத்தியது.
மொசாட் உளவு அமைப்பு
அத்துடன், ஈரான் அதிபரின் மரணத்திற்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புதான் காரணம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருவதோடு இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசியின் உலங்கு வானூர்தி விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல,இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |