கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஐ.சி.சி: அறிமுகமாகும் புதிய விதிமுறை
தாமதமாக வீசப்படும் ஓவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதிமுறையொன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த தீர்மானமானது அகமதாபாத்தில் இன்று(21) எடுக்கப்பட்டது. அதன்படி, வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை சோதனை அடிப்படையில் இந்த விதிமுறை நடைமுறையில் இருக்குமென கூறப்படுகிறது.
இந்த விதிமுறையின் கீழ் பந்துவீச்சு அணிக்கு ஓவர்களுக்கு இடையில் 60 வினாடிகள் வழங்கப்படும் என்றும் ஒரு இன்னிங்ஸில் மூன்று முறை தாமதம் ஏற்பட்டால், துடுப்பாட்ட அணிக்கு மொத்தம் ஐந்து ஓட்டங்கள் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
மேலும், ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த கடிகாரம் பயன்படுத்தப்படும் என்றும் முந்தைய ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

விதிமுறையை பின்பற்ற தவறினால் ஐந்து ஓட்டங்கள் அபராதமாக விதிக்கப்பட்டு அந்த ஓட்டங்கள் துடுப்பாட்ட அணிக்கு வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ... |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்