ஐ.சி.சி தரப்படுத்தல்: புதிய வரலாறு படைத்த ஹர்திக் பாண்டியா

Aadhithya
in கிரிக்கெட்Report this article
ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா (Hardic Pandya) சிறந்த சகலதுறை ஆட்டக்காரருக்கான பட்டியலில் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) ரி20 சகலதுறை ஆட்டக்காரருக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அதனடிப்டையில், பாண்டியா ரி20 உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடி 222 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலகக்கிண்ண தொடர்
நடைபெற்று முடிந்த ரி20 உலகக்கிண்ண தொடரில் துடுப்பாட்டத்தில் 144 ஓட்டங்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டுக்களையும் பாண்டியா வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ரி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவுடன் 222 புள்ளிகள் பெற்று வனிந்து ஹசரங்கவும் (Wanindu Hasaranga) முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

