இலங்கையர்களை ஆட்கொள்ளும் ஐஸ் - பாதிக்கப்பட்டவரின் பதற வைக்கும் வாக்குமூலம்
ஐஸ்
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தேசிய மனநல சுகாதார நிறுவகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்கள், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தமது வாழ்வில் ஏற்பட்ட சோகமான நிலைமைகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர்.
அங்கு ஐஸ் போதைப்பொருளுக்கு தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்
“நான் உயர்தரத்தில் மிகவும் சிறந்த சித்திகளை பெற்றேன். பின்னர் எயார் ஏசியாவில் பணிபுரியத் தொடங்கினேன்.
சுமார் 3 மாதப் பணிக்குப் பிறகு எயார் ஏசியாவின் புதிய மேலாளராக ஒருவர் நியமிக்கப்பட்டார். நானும் அவரும் இரவு நேர பணிக்கு மாற்றப்பட்டோம்.
தம்பி நாங்கள் ஐஸ் போதை பொருளை ஒரு முறை மாத்திரம் சுவைத்து பார்ப்போம். ஆனால் வாழ் நாளில் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையே நாசமாகிவிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னை அழைத்தவர் என்னைவிட உயர் பதவியில் இருப்பதால் நான் சரி என கூறி சென்றேன். அன்று விழுந்த நாங்கள் 13 வருடங்களாக பயன்படுத்துகிறோம்.
யாரும் இதனை பயன்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன். இதனால் மீண்டுவர முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் பதிவாளர் வைத்தியர் ஜனனி கோவின்னகே, சிகிச்சைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இதில் அதிகம் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS