வெளிநாடொன்றிலிருந்து வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka
Pakistan
Sri Lanka Customs
Drugs
By Jaso
பாகிஸ்தானிலிருந்து(pakistan) அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து பாரிய ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (24) மாலை கொழும்பு பிரதம தபால் நிலையத்திலிருந்து இந்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருள் நான்கு கிலோ கிராம் நிறையுடயது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று சந்தேக நபர்கள் கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என மூன்று சந்தேக நபர்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளின் பெறுமதி
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூபா 400 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக கனடா உட்பட சில நாடுகளில் இருந்து அநாமதேய விலாசங்களுக்கு இவ்வாறு போதைப்பொருள் அடங்கிய பொதிகள் அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி