தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்நாட்களில் அடையாள அட்டைகளை அச்சிடும் பணி முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது விண்ணப்பதாரர்கள்
இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக தினமும் திணைக்களத்திற்கு வரும் பிற பொது விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் உறுதிப்படுத்தல் கடிதம்
மேலும், வரும் டிசம்பர் மாதம் முதல் 2006 ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணியைத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

அத்தோடு, இந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை அனைத்து பரீட்சைகள் உட்பட அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் எந்த தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 9 மணி நேரம் முன்