காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்
காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.
பிணைக் கைதிகளை ரக்பா பகுதியில் சிறைபிடித்து வைத்திருந்த இவர், சமீப காலமாக இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளையும் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலின் சின்பெட் சிறப்புப் படையினரால் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் உயிரோடு கைது செய்யப்பட்டார்.
அச்சத்தில் ஹமாஸ் தளபதிகள்
இஸ்ரேலிய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் அவர், ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் பல உண்மைகளைத் தொடர்ந்து கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்த தாக்குதலை வான்வழியாக நடத்துமா அல்லது தரைவழியாக நடத்துமா என்ற அச்சத்தில் ஹமாஸ் தளபதிகள் தற்போது உறைந்து போயுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |