110 லீற்றருக்கு மேல் பெட்ரோல் வாங்குவோருக்கான விலை உயர்வு: ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஈரான் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாதாந்தம் 110 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோலைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான விலை அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி ஈரானில் பெட்ரோல் விலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் உள்நாட்டு உரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் அதன் தாக்கம் இலங்கை போன்ற இறக்கமதியாளர்களுக்கு விலைமாற்றத்தை ஏற்படுத்தலாம்மென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசாங்கப் பேச்சாளர் பாத்திமே மொஹஜெரானி
இந்த தகவலை ஈரான் நாட்டின் தற்போதைய அரசு செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி நேற்று (06.09.2026) தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முதல் மற்றும் இரண்டாவது ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் 110 லீற்றர் வரையிலான பெட்ரோலுக்கான விலையில் மாற்றம் இருக்காது.
எனினும், மூன்றாவது ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் பெட்ரோலின் விலை ஒரு லீற்றருக்கு 100,000 ஈரானிய ரியால்களாக அதிகரிக்கப்படும்.
இது சுதந்திர சந்தை மாற்று விகிதத்தின் அடிப்படையில் சுமார் 4 அமெரிக்க சென்ட்களுக்கு சமமானதாகும்.
உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ஈரானில் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் முன்னதாகவே கலந்துரையாடியிருந்த போதிலும், இதனால் புதிய போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஒரு லீற்றருக்கு 15,000 ரியால்
கடந்த 2019ஆம் ஆண்டில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஈரானில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய விலை உயர்வு மாதத்திற்கு 110 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் தேவைப்படும் நுகர்வோருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேவேளை, ஏனைய வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஒரு லீற்றருக்கு 15,000 ரியால் என்ற விலையில் 60 லீற்றர் வரையும், ஒரு லீற்றருக்கு 30,000 ரியால் என்ற விலையில் மேலும் 50 லீற்றர் வரையும் பெட்ரோலை கொள்வனவு செய்ய முடியும்.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் பெரும்பாலான நுகர்வோருக்கான மானிய விலையில் வழங்கப்பட்ட பெட்ரோலின் விலையை ஈரான் ஓரளவு அதிகரித்திருந்தது.
இதற்காக அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக” பாத்திமா மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22