யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
Jaffna
Sri Lanka Police Investigation
India
Nagapattinam
Arrest
By Theepan
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது
காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்

காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி