கொழும்பில் துப்பாக்கி இயங்காதமையால் உயிர் தப்பிய பெண்மணி
கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
கொழும்பு கொஸ்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணொருவரை இலக்குவைத்தே துப்பாக்கிச் சூட்டு முயற்சி
துப்பாக்கி இயங்காத காரணத்தால் ஆயுததாரிகள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொஸ்கொடை, நானோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருமான ‘கொஸ்கொட தாரக்க’வுடன் நெருங்கிய தொடர்புடைய பெண்ணொருவரை இலக்குவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவத்தின் போது வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை.

9 எம்.எம். ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை குறித்த பெண்ணை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும், துப்பாக்கி இயங்காமையால் அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |