இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வம்சாவளியினர்
அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டுள்ளதுடன் பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை ஒத்துழைப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening