நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்! நியூசிலாந்தில் நூலிழையில் தப்பிய பயணிகள்
நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக் கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.
நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
பணியாளர்கள்
விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்படத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |