ஹமாஸ் அமைப்பின் பாரிய சுரங்கம் கண்டுபிடிப்பு! இஸ்ரேல் படை வெளியிட்ட காணொளி
தெற்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு உருவாக்கியிருந்த பெரும் அளவிலான சுரங்க வாழ்விடத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை கண்டறிந்துள்ளதுடன் இது தொடர்பான காணொளிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சுரங்கத்தில் கடந்த ஆண்டு முழுவதும் வைத்திருந்தபின்னர், சமீபத்தில் இஸ்ரேலுக்கு ஒப்படைக்கப்பட்ட வீரர் ஹடார் கோல்டின் உடல் மறைக்கப்பட்டிருந்ததாக கருதப்படுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட சுரங்க அமைப்புகளில் இதுவே மிகப்பெரியதும், மிகச் சிக்கலானதுமான வாழ்விடப் பகுதியாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சுரங்கத்தின் அமைப்பு
சுமார் 25 மீற்றர் ஆழத்திலும், தரைத்தளத்திலிருந்து 7 கிலோமீற்றர் நீளத்திலும் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⭕️ EXPOSED: A 7+ kilometer Hamas tunnel route that held Lt. Hadar Goldin.
— Israel Defense Forces (@IDF) November 20, 2025
IDF troops uncovered one of Gaza’s largest and most complex underground routes, over 7 km long, ~25 meters deep, with ~80 hideouts, where abducted IDF officer Lt. Hadar Goldin was held.
The tunnel runs… pic.twitter.com/GTId75CvYw
அதன் உட்பகுதியில் தனித்தனியாக 80 அறைகள் உருவாக்கப்பட்டிருந்ததாகவும், மேற்பகுதியில் மசூதி, மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் இயங்கி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் இந்த முழு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சுரங்க வாழ்விடம் அடையாளம் காணப்பட்டது.
ஹமாஸ் தளபதிகள்
பல அறைகளில் ஆயுதகளஞ்சியம், சதித்திட்டங்களைத் தயாரிக்கும் வசதிகள் உள்ளிட்டவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சில அறைகள், மூத்த ஹமாஸ் தளபதிகள் உத்தரவுகளை வழங்கும் கட்டுப்பாட்டு மையங்களைப் போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் இப் பகுதியில் காணாமல் போன இஸ்ரேல் வீரர்களின் உடல்களைத் தேடிக்கொண்டிருந்தபோதும், இந்த சிக்கலான சுரங்க வாழ்விடத்தை கண்டறிய முடியவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்