ஈரான் போரை முடிவிற்கு கொண்டுவர ட்ரம்ப் வகுக்கும் திட்டம்
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால்,அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதால், ஈரான் மீண்டும் அணுஆயுதத் திட்டத்தைத் தொடங்குவது கடினம் என்றும், அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக ஈரான் பின்வாங்கியுள்ளதாகவும் ட்ரம்ப் கருதுகிறார்.
ட்ரம்பின் திட்டம்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீரானால், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடற்படை முற்றுகையை நீக்கி, தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிக்க ட்ரம்ப் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிட ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள் இந்த ஒப்பந்தச் செயல்பாட்டை முடக்கியுள்ளன.
ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள்
அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும். ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை
இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

போரை மேலும் விரிவுபடுத்துவது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், நிலைமையைச் சீராக்கச் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் ட்ரம்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |