தெற்காசியாவின் காசாவாக இலங்கை மாறி இருக்கும்: சபையில் விமல் கூக்குரல்
தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தெற்காசியாவின் காசாவாக (gaza) இலங்கையின் தென்பகுதி மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச (Vimal Weerawangsa) தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன (Palestine) பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச (Vimal Weerawangsa) இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இன அழிப்பு தொடர்பில் இலங்கை அரசு
மே 18 தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத வடுக்களை சுமந்த நாளாகும். ஆனால் இன்றைய அரசாங்கம் எமது உறவுகளை நினைவு கூறுவதை தடுத்து நிறுத்துகிறது.
பல ஆயிரம் தொலைவில் உள்ள பாலஸ்தீனத்திற்க்காக பிரேரணை விவாதம் நடத்தும் இலங்கை அரசு ஏன் எமது தமிழர்களில் உரிமைகளை முடக்குகிறது?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசியம் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பில் இலங்கை அரசு எவ்வித கரிசனையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார்.
வீட்டோ அதிகாரம்
அதேநேரம், இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ஆ. ஆ. ஹாரிஸ், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |