வீட்டை முற்றுகையிட்டால் தாக்குதல் நடத்தப்படும் - பொதுஜன பெரமுன செயலாளர் சூளுரை
house
slpp
beaten
sagara kariyavasam
By Sumithiran
தமது வீட்டை யாரேனும் முற்றுகையிட வந்தால் தாக்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரச தலைவரின் வீடு முற்றுகையிடப்பட்ட முறையில் யாரேனும் தனது வீட்டை முற்றுகையிட வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடிபட்டால் தாக்குவதே தமது கட்சியின் கொள்கை எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி