உரிமம் இன்றி தொலைபேசி விற்றால் ஏற்படப்போகும் ஆபத்து
முறையான உரிமம் இன்றி தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் (இணக்கம்) மேனகா பத்திரன தெரிவித்தார்.
இது நாள் வரை பத்தாயிரம் ரூபாய் அபராதமே விதிக்கப்பட்டு வந்தது.
திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம், அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்போகும் அபராத தொகை
தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமை அதிகரித்துள்ளமையினால் தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் ஆணைக்குழுவுக்கு சிரமம் ஏற்பட்டமையே அபராதத் தொகை அதிகரிக்கப்படுவதற்கான காரணம் என பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட கைபேசிகள் மட்டுமே விற்பனை
அதன்படி, இனிமேல் உரிமம் பெறாத கடைகளுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பதிவு பெறும் கடைகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |