சீனா பறந்தார் காவல்துறை மா அதிபர்
Sri Lanka Police
China
Priyantha Weerasooriya
By Sumithiran
சீனாவில்(china) நடைபெறும் காவல்துறை மாநாட்டில் பங்கேற்க காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய(Priyantha Weerasooriya) நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். காவல்துறை மா அதிபர் வீரசூரிய நேற்று (15) இரவு சீனாவுக்குப் புறப்பட்டார்.
அதன்படி, மத்திய மாகாணம் மற்றும் காவல்துறை நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளரான மூத்த துணை காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (எஸ்டிஐஜி) லலித் பத்திநாயக்க, காவல்துறை மா அதிபர் இல்லாத நேரத்தில் அவரது பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் உரை
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவில் நடைபெறும் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்