பரபரப்புக்கு மத்தியில் இன்று நடைபெறவுள்ள தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சந்திப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (23) திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கட்சிக்குள் உள்ள உள்ளக முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் வகையில்
இந்த நிலையில் கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள அறிவகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்சியின் செயலாளர் பதவி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அழைப்பிதழ்கள் அனுப்பி வைப்பு
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் 41 பேர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |