என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பித்திரியும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பிரபலம்!!
'சுமோவும், ரவுடி எம்பியும் தன்னை செயலாளராக்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்கள்' என்று புலம்பித்திரிகிறாராம், தமிழரசுக் கட்சியின் அந்த முன்னாள் செயலாளர்.
‘அண்ணன் உங்களைத்தான் மறுபடியும் செயலாளராக்க யோசித்து இருக்கிறோம்..’ என்று செல்லித்தானாம் அந்த மனுசனையும் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றிருந்தார்களாம்.
ஆனால் திருகோணமலையில் மத்தியகுழுக் கூட்டத்தில் அந்த மனுசனுடைய பெயரை அந்த இருவரும் பிரேரிக்கக்கூட இல்லையாம்.
இதனால் கடுப்பில் இருக்கிறாராம் அந்த முன்னாள் பிரமுகர்.
"எனக்கு பதவி தரவேண்டும் என்று நான் கூறவில்லை... குறைந்தது எனது பெயரை பிரேரிக்கக்கூடவில்லை.." என்று அந்த முன்னாள் பிரமுகர் தனது நெருங்கிய வட்டத்தில் புலம்பித்திரிகிறாராம்.
"கோதாரி பிடிப்பானுகள்... 27ம் திகதி வெளியிட்ட பெயர்ப் பட்டியலிலும் எனது பெயரைப் போடவில்லை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையின் நியமனங்கள் என்று கூறி பெயர்களைப் பிரேரித்தபோதும் என்னுடைய பெயரைக் கூறவில்லை... பிறகு என்ன 'டாஷூக்கு' என்னை உசுப்பேற்றினவர்கள் என்று கடும் கோபத்துடன் உலாவுகின்றாராம் அந்தச் சிங்கம்.
அப்ப மட்டக்களப்பில இனி ரவுடி எம்பிக்கு வெட்டுத்தான் போல..