வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி

Mullaitivu Ramalingam Chandrasekar Thurairajah Raviharan
By Independent Writer Aug 11, 2026 04:11 PM GMT
Report
Courtesy: thavaseelan

முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட கடற்றொழிலார்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இன்று(11.08.2026) இடம்பெற்ற இவ்வாண்டிற்கான இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி | Illegal Activities Fishermen Outside Mullai Seas

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.

புகைப்பட ஆதாரங்கள்

அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன். இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம் கையளிக்கின்றேன்.

வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி | Illegal Activities Fishermen Outside Mullai Seas

அத்தோடு வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வழங்குகின்றார்.

அவ்வாறு மீன்பிடிக்கான அனுமதியைப் பெறுபவர்கள் இங்கு வந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முள்ளிவாய்க்காலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நாளையதினம் வெடிக்கவுள்ள போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நாளையதினம் வெடிக்கவுள்ள போராட்டம்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடுமையாக பாதிப்பு

இந்நிலையில் குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர், சாலைப் பகுதியில் ஐந்து படகுகளை வைத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக கடற்றொழிலாளர்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர்.

வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி | Illegal Activities Fishermen Outside Mullai Seas

இவ்வாறாகத்தான் எமது முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் ஊடுருவுகின்றன. இவ்வாறு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்குகின்ற அனுமதிகளாலேயே, எமது மாவட்ட கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே எமது மாவட்டத்தில், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறே நாம் கோருகின்றாம்.

இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடற்படையினரும், காவல்துறையிரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

செம்மணியில் இன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் : சான்று பொருட்களும் மீட்பு

செம்மணியில் இன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் : சான்று பொருட்களும் மீட்பு

-

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024