திருகோணமலையில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை
Tamils
Trincomalee
Sri Lanka
By Shalini Balachandran
திருகோணமலையில் (Trincomalee) அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரையோர பகுதியில் சட்ட விரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாரி கடிதங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கடிதங்கள்
மேற்படி கடிதங்கள், கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஒட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட மனையா வெளி வீரநகர் பகுதியில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கட்டிடத்தை அகற்றாது செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்