அரச நிலத்தில் வர்த்தக நிலையம்: வவுனியா மாநகரசபை மீது பகிரங்க குற்றச்சாட்டு

Tamils Vavuniya Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Nov 11, 2025 04:31 AM GMT
Report
Courtesy: கபில்

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான அனுமதியின்றி சிறிதாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றை பெரிதாக கட்டும் நடவடிக்கை கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகர சபை செயலாளருக்கு பலரும் முறைப்பாடு செய்தும் அவர் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் மேயர், பிரதி மேயர் மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் செயலாளரிடம் தெரியப்படுத்தி இருந்ததுடன் சம்பவ இடத்திற்கும் சென்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும், மீண்டும் அதன் கட்டுமான நடவடிக்கைன் இடம்பெற்ற நிலையில் எதிர்கட்சி உறுப்பின்களின் அழுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, அனுமதியின்றி மாநரசபை கட்டளையை மீறி கட்டப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட உதவித் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் நிர்வாகம் அதனை செயற்படுத்தாது அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் சென்ற போதும் மாநகர சபை உயர் அதிகாரிகள் அதனை சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ள தவறியியமையால் அவை அகற்றப்படாமல மாநரசபை உத்தியோகத்தர்களும் மற்றும் வாகனமும் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

யாழின் தொன்மையை பாதுகாப்பதில் தொல்லியல் திணைக்களத்தின் பாராமுகம்

யாழின் தொன்மையை பாதுகாப்பதில் தொல்லியல் திணைக்களத்தின் பாராமுகம்

யாழின் தொன்மையை பாதுகாப்பதில் தொல்லியல் திணைக்களத்தின் பாராமுகம்

யாழின் தொன்மையை பாதுகாப்பதில் தொல்லியல் திணைக்களத்தின் பாராமுகம்

குருந்தூர் மலையில் தொடரும் அட்டூழியம்: அபகரிக்கப்படும் வயல் நிலங்கள்

குருந்தூர் மலையில் தொடரும் அட்டூழியம்: அபகரிக்கப்படும் வயல் நிலங்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026