24 கிலோ மான் இறைச்சியுடன் சிக்கிய மூவர்!
அம்பாறை மாவட்டத்திலுள்ள பானம சாஸ்திரவேளி பகுதியில் 24 கிலோவிற்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 25 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர்.
அந்த வேளை பானம சாஸ்திரவேளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான மூவர் அப்பகுதியில் தங்கியிருந்ததை அவதானித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மூவர் கைது
அப்போது அவர்களிடமிருந்து 24 கிலோ 300 கிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதுடன் குறித்த மூவரும் (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பானம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
03 சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட மான் இறைச்சியும் பானம வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.