சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் கைது
சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன் போது அவர்கள் பயன்படுத்திய 02 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
மேலதிக சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் 07 பேரையும், அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பனவற்றையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |