இலங்கையில் அடுத்த ஆண்டு கடும் வறட்சி : நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையில் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வறட்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான அமர்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதோடு பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
உணவுப் பாதுகாப்பற்ற நிலை
இந்த நிலையில் இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் குறித்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுண்ணூட்டச் சத்து இடைவெளி அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |