சட்ட விரோத மீன்பிடிக்கு தீர்வு: டக்ளஸ் வழங்கிய ஆலோசனை
நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் சில சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சில கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றம் சுமத்துவதாகவும், சில அரச அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சு மேற்கொண்ட விஜயத்தின் போது கடற்றொழில் அமைச்சின் நிறுவன அதிகாரிகளை நேற்று (24) சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகளும் சட்டவிரோத மீன்பிடிக்கு வழிவகுத்துள்ளதாகவும், அரச அதிகாரிகள் சாக்குப்போக்கு கூறாமல் தற்போதுள்ள விதிமுறைகளின்படி செயற்பட்டால், இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
பிரதிநிதிகள்
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.