பதுக்கப்பட்ட பாரிய அளவிலான எரிபொருள்கள் கைப்பற்றப்பட்டன!
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka Police Investigation
Sri Lanka Fuel Crisis
By Kanna
நாடு முழுவதும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பாரிய அளவிலான எரிபொருள்கள் கைப்பெற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 429 இடங்களில் இடம்பெற்ற சோதனைகளில் 27,000 லீட்டர் பெட்ரோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான விற்பனை தொடர்பான முறைப்பாடுகளை 118, 119, அல்லது 1997 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி