65 இலட்சம் பெறுமதியான ஆபரண இறக்குமதி! சந்தேகநபர்கள் கைது
Gold Price in Sri Lanka
Sri Lanka Police
Gold smuggling
By Kiruththikan
சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணத்தை இறக்குமதி செய்த கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக ஆபரண இறக்குமதி
சட்டவிரோதமான முறையில் ஆபரணம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
241 கிராம் மற்றும் 480 மில்லி கிராம் எடையுடைய தங்க ஆபரணம் ஒன்றையும், மூன்று தொலைபேசிகளையும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கைது
நிதிச் சலவை மற்றும் சுங்கத்தீர்வை செலுத்தாது பொருள் இறக்குமதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை மற்றும் கொழும்பு - 12 பிரதேசங்களைச் சேர்ந்த 20, 35 மற்றும் 42 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்