சட்டவிரோதமாக பிரித்தானியா செல்பவரா நீங்கள் -..! இறுக்கமாகும் நடைமுறை
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் குடியேறுபவர்களை வெளியேற்றுவதில் அரசாங்கம் எவ்வித சமரசங்களையும் செய்ய எதிர்பார்க்கவில்லை என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத குடியேற்ற மசோதாவின் பல பகுதிகளை ரத்துச் செய்ய அமைச்சர்கள் சபை ஆதரவளித்துள்ளது.
"எந்தவொரு ஐரோப்பிய நாட்டினதும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க இங்கிலாந்து மிகவும் விரிவான திட்டத்தை கொண்டுள்ளது." என்று கூறுகின்றது.
கோடை விடுமுறைக்கு முன் நிறைவேற்றப்படும்
இது கோடை விடுமுறைக்கு முன் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்கள் நம்புகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட விரோதமாக பிரித்தானியாவிற்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக அரசாங்கத்தின் மீது சட்டரீதியான கடமைகளை இந்த மசோதா முன் வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அண்மையில் லார்ட்ஸில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் சிகிச்சையில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது, ஆனால் இனி இவ்வாறான புதிய சமரசங்கள் எதுவும் செய்யப்பட மாட்டாது என ஊடங்களுக்கு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
மோசமான ஒரு தீர்வு
இது தொடர்பாக உள்துறை செயலாளர் யவெட் கூப்பர்,பேசுகையில், இந்த மசோதா " மோசமான ஒரு தீர்வு" என்றார்.
" நாடாளுமன்றத்தின் கோடை விடுமுறை வரும் வியாழன் தொடங்க இருப்பதனால் அதற்கு முன் குறித்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சிறிய படகுகளை "நிறுத்த" சுனக்கின் உயர்மட்ட உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த மசோதா ஆதரிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ருவாண்டாவிற்கு குடிபெயர்ந்தவர்களை இந்த திட்டத்தின் கீழ் வெளியேற்றுவதற்கு அரசாங்கம் உறுதியாக உள்ளது.
குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுவார்கள்?
ஆனால் இது அது சட்டவிரோதமானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த போதிலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வியாழக்கிழமை அனுமதி அளிக்கப்பட்ட்டுள்ளது.
இந்நிலையில் புதிய இடப்பெயர்வு மசோதாவின் கீழ் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுவார்கள்? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
இந்த நவீன அடிமைத்தனத்தைத் தடுப்பதற்கான தற்போதைய இங்கிலாந்தின் விதிமுறைகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த பொது, "புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ கடமை 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பொருந்தாது, இருப்பினும் சில சூழ்நிலைகளில் அவர்களை நாடு கடத்தவும், நீண்ட காலத்திற்கு அவர்களைத் தடுத்துவைக்கவும் அமைச்சர்களுக்கு புதிய அதிகாரங்களை இந்த மசோதா வழங்கியுள்ளது" என்று கூறப்படுகின்றது.
பிணை கோரி விண்ணப்பிக்கும் முன் குழந்தைகளை காவலில் வைக்கும் வரம்பை மூன்று நாட்களில் இருந்து எட்டாக நீடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.