மட்டக்களப்பில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம்: ஒருவர் கைது
Batticaloa
Sri Lankan Peoples
By Dilakshan
காத்தான்குடியில் வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த சுற்றிவளைப்பின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கூடிய 30 பத்திரங்கள், 12 தேசிய அடையாள அட்டைகளின் 12 பிரதிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்போது, மட்டக்களப்பை சேர்ந்த 54 வயதான ஒருவரே காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 23 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்