யாழில் சட்டவிரோதமாக இறைச்சியாக்க தாயார் நிலையில் இருந்த மாடுகள் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது 03 பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன் 58 கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது
குறித்த சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த குற்றத்தில் நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாடுகள் இறைச்சி
இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (29-08-2026) குறித்த இடத்தினை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
அதன் போது மூன்று பசு மாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக கட்டப்பட்டிருந்த நிலையிலும் ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ இறைச்சியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த 43 வயதான நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் கைது அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது தொடர்பிலும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[LCW3R6Fஸ
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

