இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு

Sri Lanka Iran Strait of Hormuz
By Sathangani Aug 29, 2026 10:11 AM GMT
Report

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!

கடற்படைத் தடை 

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு | Govt Monitoring Iran Oil Tankers Near Srilanka Eez

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் கூறுகிறது.

எனினும் குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐரிஷ் டேனா கப்பல் மீது தாக்குதல் 

கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு | Govt Monitoring Iran Oil Tankers Near Srilanka Eez

எனினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்

லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026