சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எருமை மாடுகள் - ஒருவர் கைது
Sri Lanka Police
Polonnaruwa
By pavan
பொலன்னறுவை - கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்ற விசாரணப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து குறித்த லொறி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
6 எருமை மாடுகள்
இதன்போது 6 எருமை மாடுகள் மற்றும் லொறி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி