இலங்கைக்கு கிடைக்கப்போகும் மற்றுமொரு கடன் உதவி
இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது.
அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது (Shehan Semasinghe) எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
330 மில்லியன் டொலர்
இந்த அமர்வில் இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைசச்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அனைத்து நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மூன்றாவது கடன் தவணையாக இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ள கடன் தொகை 330 மில்லியன் டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
The Article IV consultation and second review under the Extended Fund Facility (EFF) for Sri Lanka are on the IMF Board meeting agenda for June 12. The session will evaluate Sri Lanka's economic policies and reform progress. We look forward for continued support of all countries…
— Shehan Semasinghe (@ShehanSema) June 3, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |