சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு - இலங்கைக்கு சவால்நிலை
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இலங்கைக்கு தற்போது அவசியமானதாக இருந்தாலும், உண்மையில் அது தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான இணக்கப்பாடு சாத்தியமாகலாம் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஹர்ஷ டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி இணக்கப்பாடு
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய உதவிக்கான பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த மாதம் நிறைவடைவதற்குள் முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான இறுதி இணக்கப்பாடு சாத்தியமாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Ha ha none so blind as those who refuse to see! Facts are facts. Long before @RW_UNP came to @ParliamentLK we made multiple requests that we should reach @IMFNews in 2020! Anyway … no need to split hairs.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) March 4, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவாவிற்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதிய உதவி கிடைக்கப் பெற்றாலும் போதுமானதாக இருக்காது என ஹர்ஷ டி சில்வா, டுவிட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக்கு தீர்வு
It is all about markets n confidence. As the first person who urged the then @PodujanaParty gov to seek @IMFNews assistance but was dismissed I am happy #SriLanka is finally moving closer to a bailout. IMF deal is necessary but NOT a sufficient condition for growth. Cont
— Harsha de Silva (@HarshadeSilvaMP) March 4, 2023
இலங்கையின் வளர்ச்சியை உருவாக்குவதே தற்போதைய சவாலாகும் எனவும் தேவைகள் மோசமடைந்து வரும் நிலையில், இழக்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
சீர்திருத்தங்கள் இல்லாமல் உள்நாட்டுக்கு தீர்வு உள்ளது என மேடைகளில் கூறுவது சாத்தியமற்ற அம்சமாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.