ஐ.எம்.எவ் கடன் நிவாரணம் ஜனவரியில் கிடைக்கும் சாத்தியம்
Shehan Semasinghe
IMF Sri Lanka
Money
By Vanan
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர் மட்ட இணக்கப்பாடு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கடன் தொடர்பில் இதுவரையிலான ஊழியர் மட்ட இணக்கப்பாடு சிறந்த நிலையில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கையினால் தற்போது பொருளாதாரம் நிலையான மட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி