ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என அதிபர் தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் அதற்கு முன்னர் கடனாளர்களுடனான கலந்துரையாடலில் அறிக்கை உள்ளடக்கப்பட வேண்டுமென அதிபர் தெரிவித்துள்ளார்.
எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும்.
மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று அதிபர் என்னிடம் கூறியுள்ளார் ", எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்