இலங்கையின் கடன் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐஎம்எப்
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் உறுதியாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
2.9 பில்லியன் டொலர்
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்தது, இது 4 ஆண்டு திட்டமாகும்.
அதன் கீழ் இரண்டாவது மீளாய்வுக்காக இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் மட்டத்தில் உடன்படிக்கையை எட்டின. ஆனால் அது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |