இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்!
இலங்கையுடனான பேச்சு வார்த்தைகளை முடிந்தவரை விரைவாக முடிக்க சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாக நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
நிதியம் அக்கறை கொண்டுள்ளது
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் தமது நிதியம் மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.
இலங்கை, எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.
கடன் மறுசீரமைப்புக்கான கண்ணோட்டத்தை மழுங்கடித்ததால் விரக்தியடைந்த குடிமக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கோபத்தைத் திருப்பி அதிகாரம் கொண்ட அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நாடுகடத்தவும், ராஜினாமா செய்யவும் தூண்டியுள்ளனர்.
நாங்கள் ஏற்கனவே செய்துள்ள சிறந்த தொழில்நுட்ப வேலைகளின் அடிப்படையில் விரைவாக வேலைத்திட்ட பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துக்கு புதியவர் அல்ல, நிதியமைச்சராகவும், ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர், அவர் எம்முடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் மக்களிடம் ஆழமான செல்வாக்கற்றவராக இருக்கிறார்.
இலங்கையை வழிநடத்த நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும் ஓர் தலைவர் மற்றும் மக்களின் ஆதரவை பெறும் ஓர் தலைவர் உருவாகும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் எந்தவொரு நிர்வாகத்துடனும் வேலை செய்யும்" எனக் குறிப்பிட்டார்.