சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல்
Shehan Semasinghe
Sri Lanka
IMF Sri Lanka
Money
By Shadhu Shanker
மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடலின் போது இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும்” என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றிகரமான மீளாய்விற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை(12) ஆரம்பமாகவுள்ளது.
கடன் தவணை
இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் மூன்றாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி