கோட்டபாயவை போன்று ஐ.எம்.எவ் ஐயும் விரட்டி அடிப்போம்- வசந்த முதலிகே சூளுரை
சர்வதேச நாணய நிதியம் என்பது அதிசயம் அல்ல, நாட்டுக்கு மிகப் பெரிய பிரச்சினை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கோட்டபாய ராஜபக்சவை வெளியேற்றியது போன்று சர்வதேச நாணய நிதியத்தையும் வெளியேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கோட்டபாயவை விரட்ட வீதிக்கு இறங்கிய மக்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அரசாங்கம் கடனைப் பெற்று வருவதாகவும், நாட்டின் கடன் நெருக்கடிக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள பதில் கடன் வாங்குவதே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுவதற்காக கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி நாட்டு மக்கள் வீதியில் இறங்கியதாகவும், அவ்வாறானதொரு வரலாற்றை மீண்டும் மீண்டும் உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு பல நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.