வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் யாழ் வருகை..!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குழுவினர் நேற்று (11.03.2023) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று (12.03.2023) காலை 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறுப்புரிமையை பெற்றிருக்காத யாழ். பல்கலை
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்புரிமையை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெற்றிருக்காத நிலையிலும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பில் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் இந்த குழுவினர் திடீரென யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.