இலங்கைக்கு வருகை தந்த ஐ.எம்.எப் குழு! ரணிலுடன் மேற்கொள்ளவுள்ள முக்கிய கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், imf பிரதிநிதிகள் இன்று (11) முதல் ஒரு வார காலம் நாட்டில் தங்கியிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் கட்ட கொடுப்பனவு
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் குறித்த ஆய்வை இந்த பிரதிநிதிகளால் மேற்கொள்ள உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கைக்கான கடனுதவியின் இரண்டாம் கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |