இலங்கைக்கு அமெரிக்கா அளித்த உடனடி உதவி

srilanka united states donate
By Sumithiran Jun 11, 2021 06:33 PM GMT
Report

 எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தை அடுத்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்த உதவியானது தற்போதைய அவசர நிலையினால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்கும் நோக்கில் தந்துதவப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலானது சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் பிளாஸ்டிக் சிதைவுகளையும் இரசாயன கழிவுகளையும் வெளியேற்றி, கடலோர வளங்களையும் அருகிலுள்ள மீனவ சமூகங்களின் வாழ்வாதாரங்களையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவியானது தற்போதைய அவசரநிலையினால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்கும் என்பதுடன், பதிலளிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் செயற்படுத்தும் பங்காளர்களின் ஊடாக அமெரிக்கா இந்த உதவியை வழங்கியுள்ளது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் தாக்கங்களை தணிக்க உதவுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க துணைத் தூதுவர் மார்ட்டின் கெலி தெரிவித்தார்.

இந்த உடனடி உதவியானது வாழ்வாதாரங்களுக்கு உதவும் என்பதுடன், தற்போதைய இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை சமாளிக்க மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் சார்ந்த அனர்த்த பதிலளிப்பு தொடர்பான பயிற்சி உட்பட உள்நாட்டு அவசரநிலை பதிலளிப்பு ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளும் நிமித்தம் அமெரிக்காவும் ஸ்ரீலங்காவும் பல வருடங்களாக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை முகாமைத்தும் செய்ய மற்றும் குறைக்க உதவும், மற்றும் அனர்த்தங்களுக்கு தயார்படுத்திக்கொள்ளவும் அவற்றிலிருந்து சிறப்பாக மீட்சி பெறவும் சமுகங்களுக்கு உதவும் நிதியளிப்புகளை, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர், அமெரிக்க வனவள சேவை, மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் என்பனவும் வழங்குவதாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025