வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முகவர் மூலமாக சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு முக்கியமாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பல்வேறு பிரச்சினைகளை முகம்கொடுக்கும் புலம்பெயர்ந்த இலங்கை பெண் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு தூதரகங்கள் ஆரம்பத்தில் பாதுகாப்பு இல்லங்களை வழங்கியது.
இலங்கை பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, சட்டவிரோத முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு சென்றவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால், தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு தங்குமிடங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்க மறுத்துள்ளனர்.
சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.