நாட்டையே புரட்டி போடும் டிட்வா புயலின் தாக்கம் - Update
Sri Lanka
Indian 2
Cyclone
By Independent Writer
புயலின் தாக்கம்
- ராஜாங்கனை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு பேருந்து சிக்கியுள்ளது. பேருந்திலிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்க Bell 212 உலங்குவானூர்தி தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வவுனியாவில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை தொடர்கின்றது-28.11.2025 ஓமந்தை இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, யாழ்-கண்டி நெடுஞ்சாலை (A9 பாதை) மறு அறிவித்தல்வரை மூடப்படுகிறது.
- மாணவர் விடுதிகளின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயம் காரணமாக மறு அறிவித்தல் வரை பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
- ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் எண்.7 படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212, 3 மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளது. மனம்பிட்டி பாலத்தில் சிக்கித் தவித்த 13 நபர்களைக் காப்பாற்றப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
- தற்போதைய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்கள் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
- நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
- நாட்டின் தற்போதைய மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
- 70 பயணிகளுடன் கலாவெவ பாலத்தில் சிக்கியுள்ள பேருந்தில், பயணிகளின் இடுப்பு அளவு வரை நீர் நிரம்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
- மகாவ மற்றும் எலுவன்குளம் வெள்ளப்பெருக்கின் மத்தியில் மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன மஹாவ, குருநாகல் மற்றும் புத்தளம், எலுவன்குளம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற இலங்கை கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியது.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்