பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் - வெளியானது வர்த்தமானி
பல பொருட்களுக்கான இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இறக்குமதி தடைக்கான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பிரேக் பேட்கள் ஆகியவை இதனுள் அடங்கும்.
இறக்குமதி தடை நீக்கம்
நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HS குறியீடுகளால் வகைப்படுத்தப்பட்ட சில பொருட்களின் இறக்குமதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் முன் அனுமதிக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.