மின் கட்டணத் திருத்தம்..! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை, மின்சாரக் கட்டணத் திருத்தங்களில் சேர்க்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.
முந்தைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை.
நிலக்கரி இறக்குமதி
எதிர்கால கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகளைச் சேர்க்க வேண்டாம் என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிலக்கரி இறக்குமதியில் இலங்கை மின்சார சபைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நஷ்டங்களே நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணிகளில் ஒன்று என இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை மின்சார சபையின் நிதி நிலைத்தன்மையையும் அதன் இருப்பையும் உறுதி செய்வதற்கு கட்டணங்களைத் திருத்தி அமைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |